Posts

புங்கை மரத்தின் நன்மைகள்

Image
இன்றைய வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் மரங்கள் இல்லாதது. வளர்ச்சிப்பணிகள் என்று, ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. இதனால், நிழல் தந்த பல மரங்கள், இயற்கை எய்தி விட்டன. மழை குறைவுக்கும் ஒரு காரணம் இது தான். மரங்களை வெட்டி விட்டு, மழை இல்லையே என்று குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை. சமூக ஆர்வலர்களின் தொடர் விழிப்புணர்வு, பலரது மனங்கள் மத்தியில், மரங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டிருக்கிறது. நல் உள்ளம் கொண்ட இயற்கை ஆர்வலர்களால், ஆங்காங்கே, வீடுகளிலும், தெருவோரங்களிலும் மரக்கன்றுகளை கொஞ்சமாவது பார்க்க முடிகிறது. கான்கிரீட் வீடுகளாலும், அவற்றில் இருந்து வெளியேறும் வேதியல் கூறுகளாலும், மரங்களை அழித்ததாலும், காற்று வெப்பமடைந்து வருகிறது. பற்றாக்குறைக்கு, வாகனங்களின் புகையால் காற்றின் வெப்பம் அதிகரிக்கிறது. அதிகப்படியான மின் விளக்குகளாலும் வெப்பம் அதிகரிக்கிறது. காற்றில் உள்ள வெப்பத்தையும், மாசுவையும் குறைக்கும் குணமுள்ளது புங்கை. அதேபோல், இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றை சுலபமாக, மாசுவில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணிக்கும் திறன் க

வேர்க்கடலையின் பயன்கள்

Image
வேர்க்கடலை அனைவருக்கும் பிடித்த உணவு பொருள். விலைகுறைவு என்பதால் இதை குறைவாக எண்ண வேண்டாம். இதில் புரத சத்து அதிகம் உள்ளது, ஏழைகளின் பாதாம் என்று கூறலாம். இதில் உள்ள வைட்டமின் பி தசைகளின் வலிமைக்கும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க கூடியது. இதில் நமக்கு நன்மை செய்யும் கொழுப்பு உள்ளது. உடலின் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதில் உள்ள அமினோ அமிலம் செரட்டோனின் என்ற உயிர் வேதிப்பொருளை சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது. இது நம் பாரம்பரிய உணவு பொருளாகும். இதை தினமும் இரவு நீரில் ஊற வைத்துவிட்டு அதிகாலையில் உண்ணும் பொழுது மிக அதிக சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கிறது மேலும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள உணவுப் பொருள். வேர்க்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

பால் கூல்

Image
சோளம் ஊறவைத்து முளை கட்டி அரைத்த பாலில் கூழ். ராகி ஊறவைத்து அரைத்து செய்த புட்டு. வேகவைத்த நிலக்கடலையுடன் காலை உணவு ☺️

இஞ்சியின் பயன்கள்

Image
இஞ்சியின் பயன்பாடு பலகாலமாக தொடர்கிறது. பல ஆயுர்வேத மருந்துகளிலும் சேர்க்கப்படும் இஞ்சி, தொண்டைக்கு ஏற்றது. உடல் வலியை குறைப்பதில் உதவும் இஞ்சி, செரிமான திறனையும் மேம்படுத்துகிறது. உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் அத்திப் பழத்தை உலர வைத்தும் பயன்படுத்தலாம். மாங்கனீசு, புரதம், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை அத்திப் பழத்தில் அதிக அளவில் இருக்கிறது. மற்ற பழங்களில் இருப்பதைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களும் அத்திப் பழத்தில் இருக்கிறது.

கேரட்டின் நன்மைகள்

Image
கேரட் ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம். குளிர்காலத்தில் அதிக விளைச்சல் இருப்பதால் மலிவு விலையில் கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும் கேரட்டை அப்படியே சாப்பிட்டலாம், சமைத்தும் சாப்பிடலாம். 1100 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃப்கானிஸ்தானில் கேரட் தோன்றியது என்று நம்பப்படுகிறது. பிறகுதான் உலகின் வேறு பகுதிகளுக்கு கேரட் சாகுபடி பரவியது. கி.பி 1500 இல் ஐரோப்பாவில் ஆரஞ்சு நிற கேரட் விளைவிக்கப்பட்டன. இப்போது பல நாடுகளில் ஊதா நிற கேரட்டும் பயிரிடப்படுகின்றன. நார்ச்சத்து, விட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள கேரட், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவுகிறது.

புரொகோலினை எப்படி உண்ணவேண்டும்

Image
வாழைத்தண்டு, நீர்பூசணி, சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் என பல காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. முட்டைகோஸ், காலிஃபிளவர், புரோக்கோலி போன்றவையும் உடலின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருப்பவை. காலிஃபிளவர் மற்றும் புரொக்கோலியில் சிறு சிறு புழுக்கள் இருக்கும் என்பதால் அவற்றை நன்றாக சுத்தம் செய்த பிறகே சமைக்கவேண்டும். ஒரு ஆராய்ச்சியின்படி, கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் புரோக்கோலியின் தேவை ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது.

வெயில் காலத்தில் உண்னவேண்டிய பழங்கள்

Image
பருவநிலை மாறும் இந்த நேரத்தில் உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவை. எனவே, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். வெள்ளரி, தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். இளநீரை மறந்துவிடாதீர்கள். இந்தியாவில் பூசணி வகைகள் அதிகமாக கிடைக்கிறது. நார்ச்சத்து மிகுந்த இவை உடலுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றவை. குடலுக்கு நன்மை பயக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் திறன் கொண்ட பூசணியை பலவிதமாக சமைத்து சாப்பிடலாம். 100 கிராம் முலாம்பழத்தில் 34 கிலோ கலோரி சத்து உள்ளது. இதன் ஊட்டச்சத்து மதிப்பெண் 50